தரங்கம்பாடி பகுதியில் மாடி வீடு இடிந்து 4 ஆடுகள் பலி
கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவில் விட்டுவிட்டு கனமழையானது கொட்டி தீர்த்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் தரங்கம்பாடி பகுதியில் 13சென்டிமீட்டர் மழையும் செம்பனார்கோவிலில் 18 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இடைவிடாத பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தரங்கம்பாடி அருகே அனந்தமங்களம் ஓடக்கரை தெருவை சார்ந்த ரத்தினகுமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 35 ஆண்டுகள் பழமையான மாடி வீடு மழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் உரிமையாளர் ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் வீட்டின் பின்புறம் உறங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இடிந்து விழுந்த வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இடிபாடில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது
Next Story



