அதி நவீன வசதியுடன் நடமாடும் ரத்த சேகரிப்பு மையம் ரூ.42லட்சம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு டிரஸ்ட் மூலமாக ரூ 42 லட்சம் மதிப்பிலான அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ரத்த சேகரிப்பு வேன் வழங்கப்பட்டது:- மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
:- மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீ சந்திரசேகர் டிரஸ்ட், பிகேஎஃப் மற்றும் ஆர்கியான் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலம் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ரத்த சேகரிப்பு வேன் இன்று வழங்கப்பட்டது. மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரியிடம் நடமாடும் ரத்த சேகரிப்பு வேனின் ஆவணங்கள் மற்றும் சாவிகளை அறக்கட்டளை நிறுவனத்தினர் ஒப்படைத்தனர். மூன்று கொடையாளர்களிடம் ஒரே நேரத்தில் ரத்தம் சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மருதவாணனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ரத்தம் சேகரிக்கும் வாகனத்தை மாவட்ட வருவாய் ஆய்வாளர் உமாமேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் டெல்டா பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசைமணி, குத்தாலம் கல்யாணம், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story