கரூர் மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான சிலம்ப போட்டியை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
Karur King 24x7 |15 Nov 2025 4:17 PM ISTகரூர் மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான சிலம்ப போட்டியை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான சிலம்ப போட்டியை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டியை கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி போட்டியை துவக்கி வைத்தார். முதல் நாள் போட்டிகளில் பெண்களுக்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். போட்டியில் 14 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். மற்றும் பொது பிரிவில் வயது வரம்பு இல்லாத பெண்களும் கலந்து கொண்டனர். இப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு 15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையை வழங்க உள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் கைகளை தட்டி பரவசப்படுத்தினர்.
Next Story




