கரூர்-தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்தநாள். அன்பு கரங்கள் இல்லத்தில் திமுகவினர் கொண்டாட்டம்.

கரூர்-தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்தநாள். அன்பு கரங்கள் இல்லத்தில் திமுகவினர் கொண்டாட்டம்.
கரூர்-தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்தநாள். அன்பு கரங்கள் இல்லத்தில் திமுகவினர் கொண்டாட்டம். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் ஆதரவற்ற மாணவ - மாணவியர் மற்றும் முதியோருக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ்,கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட மாநில மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
Next Story