கரூர் மாவட்டத்தில், தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 49 லட்சம் ரூபாய் பரிசு. முன்னாள் அமைச்ச
Karur King 24x7 |30 Nov 2025 3:09 PM ISTகரூர் மாவட்டத்தில், தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 49 லட்சம் ரூபாய் பரிசு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
கரூர் மாவட்டத்தில், தமிழக துணை முதலமைச்சர் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 49 லட்சம் ரூபாய் பரிசு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கபடி போட்டி செஸ் போட்டி சதுரங்க போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் நேற்று மாலை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் 45 நாட்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவதாகவும்,இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு மொத்தம் 49 லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story





