கரூர் அருகே சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து. 5 பேர் காயம்.

கரூர் அருகே சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து. 5 பேர் காயம்.
கரூர் அருகே சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து. 5 பேர் காயம். சேலம் மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு டூரிஸ்ட் வேன் மூலம் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூர் மாவட்டம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இதனை கவனித்த வேன் ஓட்டுநர் வேனின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த டூரிஸ்ட் வேன் மீது மோதியது. டூரிஸ்ட் வேன் முன்னாள் இருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story