தாழ்த்தப்பட்டோர் ஆதி திராவிட மக்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.50 கோடி தள்ளுபடி

தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாங்கிய கல்விக்கடன் 50 கோடியை ஒரே கையெழுத்தில் ரத்து செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினை விட தமிழகத்தை ஆள வேறு தகுதியுள்ள தலைவர் யார் இருக்கிறார்கள் அமைச்சர் கோவி.செழியன்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி, பரசலூர், மடப்புரம், கிடாரங்கொண்டான் மற்றும் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிகளில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடக்கி வைத்து, 350 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற முகாமில், எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் முழுஉருவச் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முகாமில், அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், இந்தியாவில் 2030-ல் கல்வியில் 50 சதவீத வளர்ச்சியை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போதே 48 சதவீதத்தை அடைந்து விட்டோம். இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்த ஒரே மாநிலம் நம் தமிழ்நாடு மட்டுமே. அகில இந்திய அளவில் உயர் கல்வி 28 சதவீதம். இந்தியாவில் கல்வி சதவீதம் 50 தொடுகிறபோது தமிழ்நாடு 98 சதவீதத்தை எட்டியிருக்கும். அம்பேத்கார் வகுத்த சட்ட பாதுகாப்பு இல்லை என்றால் தாழ்த்தப்பட்டோருக்கு படிப்பு கிடைத்திருக்காது. அதை வீதியில் வைத்து தந்தை பெரியார் போராடவில்லை என்றால் தாழ்த்தப்பட்டோர்ர் உயர்கல்வி படித்திருக்க முடியாது. இந்த இரண்டையும் சட்டமாக்கிய கலைஞரால் உயர்கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாங்கிய கல்விக்கடன் ரூ.50 கோடியை ஒரே கையெழுத்தில் ரத்து செய்த முதலமைச்சர் ஸ்டாலினை விட தமிழகத்தை ஆள வேறு தகுதியுள்ள தலைவர் யார் என பேசினார்.
Next Story