மயிலாடுதுறை புத்தக கண்காட்சியில் ரூ. 50 லட்சம் விற்பனையை எட்டியது

மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் களைகட்டியது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான புத்தங்கள் விற்பனையாகியுள்ளன
மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் பிப்.10-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இதில், 65 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தினசரி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஆறாம் நாளாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டதால் புத்தகத் திருவிழா மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. புத்தகத் திருவிழாவில் இதுவரை சுமார் ரூ.50 லட்சம் அளவிலான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.
Next Story