கரூரில் அறிவிக்கப்படாமல் நடைபெற்று வரும் மணல் குவாரியில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மணல் கொள்ளை-முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
Karur King 24x7 |13 Nov 2025 3:57 PM ISTகரூரில் அறிவிக்கப்படாமல் நடைபெற்று வரும் மணல் குவாரியில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மணல் கொள்ளை-முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
கரூரில் அறிவிக்கப்படாமல் நடைபெற்று வரும் மணல் குவாரியில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மணல் கொள்ளை-முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். அப்போது கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் ஆம்னி பேருந்து விவகாரம் தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த எம் ஆர் விஜயபாஸ்கர், கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்களுக்கு தமிழகத்தில் வரி வசூலிப்பது போல இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலிக்க ஆரம்பித்து உள்ளார்கள். இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வரி செய்து செலுத்த முடியாமல் உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கூடி விவாதித்து இதற்கு நல்லதொரு தீர்வை எட்ட வேண்டும் எனவும், தற்போது சபரிமலை சீசன் என்பதால் கேரளாவுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை காவிரி ஆற்றில் இருந்து தொழிலாளர்களை பயன்படுத்தி லாரிகளில் அறிவிக்கப்படாத மணல் குவாரி செயல்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை எனவும் , இந்த மணல் கொள்ளை விவகாரத்தில் காவல்துறை மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினருக்கு இதில் பங்கு உள்ளது என தெரிவித்தார்.
Next Story




