தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
Karur King 24x7 |13 Dec 2025 6:27 PM ISTதேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கடந்த 2021 தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற கோரி ஜேக்டோ ஜியோ சார்பில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி 2021 தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம்,காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், பெரியசாமி, தமிழ் மணியன்,பொன். ஜெயராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சதீஷ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். கடந்த தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



