மழைநீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதி சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலைமழைநீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்
Ponneri King 24x7 |3 Dec 2025 10:23 AM ISTசோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் சமூக ஆர்வலர் உதவியுடன் ஊராட்சி செயலர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற படாத பாடுபட்டு வருகின்றனர்.
மூன்று நாட்களாக மழைநீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதி சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் சமூக ஆர்வலர் உதவியுடன் ஊராட்சி செயலர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றப்படாத பாடுபட்டு வருகின்றனர். வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி சி காலனி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிக்கு ஆளாயினர் இது குறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மூன்று நாட்களாக தவித்து வந்தனர் இதனிடையே தற்போது ஊராட்சி நிர்வாகம் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் இல்லாததால் குடியிருப்புகளைச் சார்ந்த தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் அக்கரை காட்டாமல் இருந்தனர் இந்த நிலையில் அலமாதி ஊராட்சி செயலர் அபி கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் குமார் என்பவரின் ஜேசிபி எந்திரத்தின் உதவியாள் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை மண்ணை வெட்டி வெளியேற்றி வருகின்றனர் இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் கன மழை நீடிப்பதால் அலமாதி வாணியன் சத்திரம் பூச்சிஅத்தி பேடு எடப்பாளையம் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதி உற்று வருகின்றனர்
Next Story


