ஊழலில் சம்பாதித்த பணத்தில் வாக்காளர்களுக்கு 5,000-மோ,ரூ.10,000-மோ கொடுத்தால் கூட கரூரில் மக்கள் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என முடிவெடுத்து விட்டார்கள்.
Karur King 24x7 |14 Dec 2025 3:32 PM ISTஊழலில் சம்பாதித்த பணத்தில் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரமோ பத்தாயிரமோ கொடுத்தால் கூட கரூரில் மக்கள் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள். கரூரில் பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேச்சு.
ஊழலில் சம்பாதித்த பணத்தில் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரமோ பத்தாயிரமோ கொடுத்தால் கூட கரூரில் மக்கள் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள். கரூரில் பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேச்சு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினரான பழனி கனகராஜ் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ்,மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில துணைத்தலைவர் மகுடபதி, மாவட்டத் துணைத் தலைவர் சக்திவேல் முருகன் உள்ளிட்ட கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மந்திரியான போதும்,அவர் செய்த ஊழல் காரணமாக நீதிமன்றம் அவர் பதவியை பறித்தது. மனிதர்கள் தவறை ஒருமுறை செய்யலாம் இரு முறை செய்யலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் செய்யும் திமுக எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார் செந்தில் பாலாஜி என அவர் பெயரை குறிப்பிடாமல் கூறினார். நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் மணல் அல்ல தடை விதித்த போது,விடிய விடிய தொடர்ந்து மணல் திருட்டை நடத்தி வருகின்றனர். இதே போல கரூர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி வியாபாரம் களைகட்டி வருகிறது இதையும் திமுக பொறுப்பாளர் ஒருவர் தான் செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியில் சாதாரணமாக 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள் இன்று நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை பத்து மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தி பொதுமக்கள் வேதனையில் ஆழ்ந்து வருகிறார்கள் என்றும் ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு 30 லட்சம் வரை ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தில் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரமோ பத்தாயிரமோ கொடுத்தால் கூட கரூரில் மக்கள் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்து விட்டார்கள் என்று தெரிவித்தார்.
Next Story




