வாராஹி அம்மனுக்கு 508 திருவிளக்கு பூஜை
Mayiladuthurai King 24x7 |10 Aug 2024 5:03 AM GMT
மயிலாடுதுறை அருகே கழுகாணி முட்டம் வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் கழுக்கானிமுட்டம் பகுதியில் ஸ்ரீ மஹா பஞ்சமி வாராகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி வெள்ளியான இன்று கருட பஞ்சமி திதியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று குழந்தை வரம் வேண்டியும், தாலி பாக்கியத்திற்காகவும் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து 108 நாமங்களை கூறி குங்கும அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வாராகி அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story