கரூரில் 6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர்.
Karur King 24x7 |29 Jan 2026 1:37 PM ISTகரூரில் 6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர்.
கரூரில் 6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் ரவீந்திரன், வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட கரூர் தாலுகா அளவிலான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வி தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் இடமும், இருபது ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியவும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story





