ஆந்திர பிரதேச வீட்டு வாஸ்து துறை அமைச்சர் 60ஆம் கல்யாணம்

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் ஆந்திரப் பிரதேசம் வீட்டு வசதி துறை அமைச்சர் சஷ்டியப்த பூர்த்தி விழா. குடும்பத்தினர் உறவினர்கள் பங்கேற்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீஅபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் உயிர்பித்த தலம். இதனால் இங்கு தினந்தோறும் ஆயுள் விருத்தி வேண்டி ஆயுள் ஹோமம் சஷ்டியப்தபூர்த்திவிழா, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமண வைபவங்கள் பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வர். அந்த வகையில் இன்று ஆந்திர பிரதேசம் மாநிலம் வீட்டு வசதி துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி அவர் மனைவி கமலா லட்சுமி ஆகியோருக்கு சஷ்டியப்த பூர்த்திவிழா நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரால் தம்பதியினருக்கு குடும்பத்தினர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி லட்சுமி தம்பதியினர் திருமண கோலத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story