ரூ 7 கோடியில் மின் இறங்கு தளம் குட்டிஆண்டியூர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் இறங்குதளத்தை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறப்பு.
.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிஅருகே குட்டியாண்டியூரில்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் இறங்குதளத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், குத்துவிளக்கேற்றி மீன் இறங்கு தளத்தை மீனவ கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து பேசிய பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கூறுகையில் குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நேர்கல் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று மீன் இறங்குதளத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார் என்று கூறினார்.  மேலும் மீனவ கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம்  அடுத்த மாதம் இறுதிக்குள்  செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தினந்தோறும் 20 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story