பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் கணேசன் தலைமையில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்.,

பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் கணேசன் தலைமையில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்.,
பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்., பொள்ளாச்சி. ஆகஸ்ட்.,30 பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் கணேசன் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது., முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளர் கணேசனுக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்., இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தவிர திமுக,மதிமுக உள்ளிட்ட 33 உறுப்பினர்கள் பங்கேற்றனர்., முன்னதாக இந்த கூட்டத்தில் மறைந்த திமுக கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்., இந்த அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் நகராட்சி வார்டு பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால் கொசு மருந்து அடிக்க தீவிர காட்ட வேண்டும், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்., இதைத்தொடர்ந்து பதிலளித்து பேசிய நகராட்சி ஆணையாளர் கணேசன்., நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் , காலியாக உள்ள பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமிக்குமாறு அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் எந்த குறைகளும் இல்லாமல் பணிகள் நடக்கும் என்றும், நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகை விடும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளது என்றும் பதில் அளித்து பேசினார்.,
Next Story