கரூர்-இந்திய அரசியலமைப்பை உருவாக்கி தந்த அண்ணல் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளில் அதிமுகவினர் புகழஞ்சலி.
Karur King 24x7 |6 Dec 2025 1:36 PM ISTகரூர்-இந்திய அரசியலமைப்பை உருவாக்கி தந்த அண்ணல் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளில் அதிமுகவினர் புகழஞ்சலி.
கரூர்-இந்திய அரசியலமைப்பை உருவாக்கி தந்த அண்ணல் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளில் அதிமுகவினர் புகழஞ்சலி. சுதந்திர இந்தியாவிற்கு என புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அவரது தலைமையில் அரசியல் அமைப்பை உருவாக்கி தந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர். இவர் தனது 65 ஆவது வயதில் 1956 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு எங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர்,சமுதாய அமைப்பினர் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் மறைந்த அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆலோசனையின் பேரில் கட்சியின் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி ,மாவட்ட அவைத் தலைவர் திரு வி கா தலைமையில் கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையுமான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 70-வது நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story





