பருத்தி குவிண்டால் சராசரி விலை ரூ.7050

பருத்தி குவிண்டால் சராசரி விலை ரூ.7050
X
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரு கோடியே‌ 12 லட்சம் ரூபாய்க்கு   பருத்தி ஏலம்     
மயிலாடுதுறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 550 விவசாயிகள் 1600 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து வைத்தனர். பல மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்த 13 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7552-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6509-க்கும், சராசரி விலையாக ரூ.7050-க்கும் விலை போனது. ரூபாய் 1கோடியே‌ 12லட்சம்  பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story