முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள்- ரத்த தானம் செய்த கட்சியினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள்- ரத்த தானம் செய்த கட்சியினர்.

இரத்த தானம் செய்த அதிமுகவினர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள்- ரத்த தானம் செய்த கட்சியினர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதன்முதலாக எம் ஆர் விஜயபாஸ்கர் ரத்ததானம் கொடுத்து, ரத்ததான விழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று ரத்ததானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி கலந்துகொண்டு ரத்த தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்தினார்.

Tags

Next Story