முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78-பிறந்த நாள்-பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் பரிசுத் தொகை, கோப்பைகளை வழங்கினார்.

கரூர்- முன்னா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள்-பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுத் தொகை, கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.
கரூர்- முன்னா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள்-பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுத் தொகை, கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். கரூர், அம்மா சாலை அருகே உள்ள தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தமிழக தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 86 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் ஜி.டி.ஏ சிக்ஸ் மற்றும் பிளாக் ஸ்குவாட் அணிகள் மோதியது. இதில் ஜி.டி.ஏ சிக்ஸ் அணி நான்கு ஓவரில் 64 ரன்கள் எடுத்த முதல் பரிசாக 25,078 ரூபாயும், பிளாக் ஸ்குவாட் அணி 63 ரன்கள் எடுத்து இரண்டாம் பரிசாக 20,078 ரூபாயும், கே.டி பாய்ஸ் 66 ரன்கள் எடுத்து மூன்றாம் பரிசாக 15,078 ரூபாயும், டி.சி.சி அணி 55 ரன்கள் எடுத்து நான்காம் பரிசாக 10,078 ரூபாயும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆள் ரவுண்டர் ஆகியவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Next Story