திருவிடைமருதூர் பாமக பிரமுகர் கொலை வழக்கில் nia அதிகாரிகள் 2 இடங்களில் சோதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை. இரண்டு மணி நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை
திருவிடைமருதூர் பாமக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிகாலை முதல் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்.ஐ.ஏ டிஎஸ்பி சுசிலா தலைமையில் வடகரை நவாஸ்கான் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது நவாஸ்கான் ஒரு மாதத்திற்கு முன் சிங்கப்பூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு இடங்களிலும் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
Next Story