மயிலாடுதுறை NPKRR சர்க்கரை ஆலை ஜப்தி நடவடிக்கை? விவசாயிகள் அதிர்ச்சி!

மயிலாடுதுறை தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரைஆலை 1993 இல் விரிவாக்கம் என்ற பெயரில் தனியார்நிறுவனம் செய்த வேலையில் பழுது ஏற்பட்டதால் ஆலை நட்டத்தில் இயங்கி மூடப்பட்டது நிலுவைத் தொகைகேட்டு நீதிமன்றம் மூலம்தனியார் நிறுவனம் ஜப்தி நடவடிக்கை இறங்கி உள்ளதுவிவசாயிகளைஅதிர்ச்சியில்உறையச்செய்துள்ளது.
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987ஆம் ஆண்டு எம்ஜிஆரால் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500 டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வேலையை தனியார் பென்னி நிறுவனம் ஒன்று செய்துள்ளது. இந்த விரிவாக்க பணிகள் முறையாக செய்யாததால் 3500 டன் முழு கொள்ளவை அரைக்க இயலாமல் ஆலை நட்டத்தில் இயங்கியது. இதனால் தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2 கோடி பாக்கியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் தனியார் நிர்வாகம் வழக்கு தொடுத்து நிலுவைத் தொகை அபராதத்துடன் சுமார் ரூபாய் ஆறு கோடி பெறுவதற்கான உத்தரவை பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டுவிட்ட நிலையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கவில்லை. இதனால் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மூலம் தனியார் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மனு அளித்தனர். இதனால் என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இடங்களை கையகப்படுத்த 38 சர்வே இடங்களில் ஆய்வு செய்து அதன் மதிப்பை அறிவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நிலஅளவை துறையினர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் ஆலையின் கட்டிடம் மற்றும் சில பகுதிகளின் மதிப்பீடு பணியை செய்தனர். ஆலையில் பங்குதாரர்களாகிய விவசாயிகளை உள்ளே விடாமல் அளவீடு பணி நடைபெறுவதாகவும், விவசாயிகளின் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு கூறிய நியைில் அனைத்து குழுவினரும் ஆய்வு செய்தும் ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாகவும், ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story