கரூரில் SIR வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் திமுகவினர் முறைகேடு - முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
Karur King 24x7 |13 Nov 2025 3:46 PM ISTகரூரில் SIR வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் திமுகவினர் முறைகேடு - முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
கரூரில் SIR வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் திமுகவினர் முறைகேடு - முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் புகார். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை SIR தேர்தல் ஆணையத்தால் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில்வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பிஎல்ஓ வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து விண்ணப்ப படிவங்களை நேரடியாக வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பி எல் ஓ அதிகாரிகளுக்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் பிஎல்ஓ அதிகாரிகளை மிரட்டி படிவங்களை பெற்று தங்கள் இஷ்டம் போல் நிரப்பி வருகிறார்கள் என முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று திமுகவினர் செய்த முறைகேடுகளை புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று இன்று புகார் அளித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த அவர், பி.எல்.ஓ அதிகாரிகளுக்கு இப்பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டிருந்தும் ஒரு சில பிஎல்ஓ அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதும்,திமுகவினர் குறிப்பிட்ட பிஎல்ஓ-க்களை மிரட்டி அவர்களிடம் உள்ள விண்ணப்ப படிவங்களை பெற்று தாங்களாகவே நிரப்பி வருகின்றனர். குறிப்பாக பத்தாண்டுகளுக்கு முன்பாகவே கரூரிலிருந்து தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்த குடும்பத்தினர்க்கு தூத்துக்குடியில் வாக்குரிமை இருந்த போதும்,அந்த விண்ணப்பங்களை நிராகரிக்காமல் அதனை திமுகவினர் பெற்று சென்று நிரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம். மீண்டும் தொடர்ந்து இவ்வாறு நடைபெற்று வருவதால் மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.
Next Story



