கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் SP கொடியைசைத்து துவங்கி வைத்தார்.
Karur King 24x7 |14 Jan 2026 11:58 AM ISTகரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் SP கொடியைசைத்து துவங்கி வைத்தார்.
கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் SP கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு கொடியைசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி கரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியின் போது வாகனங்களில் இருவருக்கும் மேல் செல்வதை தவிர்ப்போம். . சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம்.இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை மீறுவது இழிவான செயல் என எண்ண வேண்டும். ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம்.சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் உள்ளிட்ட கருத்துக்களை பதிவு செய்தார் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா. பேரணியில் காவல்துறையினர்,ஊர்க்காவல் படையினர் என பலர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story








