10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கலெக்டர் ஆய்வு

X

. தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வினை 6,184 மாணவர்கள், 6202 மாணவிகள் மற்றும் 355 தனித் தேர்வர்கள் என மொத்தம் 12,741 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 52 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி க்குட்பட்ட பட்டமங்கலத் தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் உள்ளனர்.
Next Story