கள்ளச்சாராய வேட்டையில் 10 பேர்கைது 205லிட்டர் சாராயம் பறிமுதல்

கள்ளச்சாராய வேட்டையில் 10 பேர்கைது 205லிட்டர் சாராயம் பறிமுதல்

பைல் படம்


மயிலாடுதுறை காவல் உட்கோட்ட பகுதி கள்ளச்சாராய வேட்டையில் 10 பேர்கைது 14 மது பாட்டில் உள்பட 205லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை 10பேர் கைது மயிலாடுதுறை பகுதியில் கள்ளச் சாராயம் மற்றும் டாஸ்மாக் கடை திறக்கும்முன்பு மதுபாட்டில் விற்பனை குறித்து மயிலாடுதுறை போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அதில் மயிலாடுதுறை போலீசார், மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் மகேஸ்வரன் என்பவர் 180 மிலி கொண்ட இரண்டு மதுபாட்டில்களை விற்பனை செய்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

சோழசக்கரநல்லூர்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் 4 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தபோது மணக்குடியை சேர்ந்த ராகவன் கைதுசெய்யப்பட்டார். செம்பனாரகோவில் போலீசார் சிதம்பரம்கோவில்பத்து பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த தூண்டில்நாகராஜன் என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்து 10 லிட்டர் பாண்டிச் சாராயத்தைக் கைப்பற்றினர், மகாராஜபுரத்தில் கீழையூரை சேர்ந்த சௌந்திரராஜன் என்பவரைப் பிடித்து அவரிடமிருந்த 10 லிட்டர் பாண்டிச் சாராயத்தைக் கைப்பற்றினர்.

பாலையூர் போலீசார் மேலஅலகலங்கன் பகுதியில் எஸ்.புதூரை சேர்ந்த ஜான் என்பவரைக் கைதுசெய்து அவர் வைத்திருந்த 4 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர், கோனேரிராஜபுரத்தில் சுந்தர்ராஜன் என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்து 10 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கைப்பறினர், பெரம்பூரை போலீசார் மாந்தை என்ற இடத்தில் சௌந்தர்ராஜன் என்பவரைக் கைதுசெய்து அவிரிடமிருந்து 10 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கைப்பற்றினர். குத்தாலம் போலீசார் கட்டளைச்சேரியில் வடிவேல் என்பவரைக் கைதுசெய்து அவர் வைத்திருந்த 4 மதுபாட்டில்களைக் கைப்பற்றினர். மணல்மேடு போலீசார் குறிச்சி ராசாவாய்க்கால் பகுதியில் சோதனை செய்தபோது சித்தமல்லி சின்னமணி என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கைப்பற்றி அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஆத்தூர் பாலகரையான் கோயில் அருகில் 55 கள்ளச்சாராயத்துடன் சிக்கிய ஆத்தூர்பாஸ்கரனைக் கைதுசெய்தனர். மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்தில் 10பேர் கைது செய்யப்பட்டனர். 14 மது பாட்டில்களும் 205 லிட்டர் கள்ளச் சாராயமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

Tags

Next Story