வழிப்பறி நடந்த 12 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் மீட்பு

மயிலாடுதுறையில் நேற்று இரவுவழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் 12 மணி நேரத்திற்குள் கைது செய்து 10 லட்சம் பணத்தை மீட்டது சீர்காழி போலீஸ்.
சிதம்பரம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பரகத் ஸ்டோரில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வந்தவர் 30.05.2024-ம் தேதி இரவு 9.00 மணியளவில் சீர்காழி பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் கொடுத்த வகையில் பணம் வசூல் செய்துவிட்டு பணத்தை தனது பையில் வைத்துக்கொண்டு சிதம்பரம் செல்வதற்கு சீர்காழி மீனா மெட்டல் கடை அருகில் வந்தபோது பெயர் விலாசம் தெரியாத Passion Pro மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் மேற்கண்ட மாரியப்பன் வைத்திருந்த பையை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டதாகவும் பையில் வசூல் செய்த பணம் ரூ.10,00,000/- (பத்து லட்சம்) உள்ளதாகவும் இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நகரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த வகையில் குற்றவாளி யார் என்று தெரியவந்தது உடனடியாக செயல்பட்ட போலீசார் சீர்காழி ஜீவா மகன் பிரேம்குமார் (22 ) தஞ்சையை சேர்ந்த ஜலாலுதீன் மகன் பாசித் ( 19) ஆக இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த பணம் மற்றும் வழிப்பறி குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கரவாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் 12 மணி நேரத்திற்குள் சீர்காழி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்ததை உயர் அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

Tags

Next Story