புயல் மழை- கரூர் வர்த்தக சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்

புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் வர்த்தக சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது

புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் வர்த்தக சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. சென்னையை கடந்த மிக்ஜாம் புயலால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் வசிக்கும் வீடுகளை, வெள்ளநீர் சூழ்ந்ததால் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணமாக அனுப்பப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், கரூர் வர்த்தக சங்கம் சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. நி

வாரன பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் செயலாளர் வெங்கட்ராமன், மாநில துணைத்தலைவர் V.R. கந்தசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பைனான்ஸ் அசோசியேசன் செயலாளர் பேங்க் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story