100 நாள் வேலைக்கான கூலி வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X

100 நாள் வேலைக்கான கூலியை வழங்காத மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும்திமுகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்
. மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைக்கான சம்பளம் வழங்காத மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அடிக்காதே அடிக்காதே ஏழை வயிற்றில் அடிக்காதே வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே திருடாதே திருடாதே சம்பள பணத்தை திருடாதே மோடி மோடி என்னாச்சு எங்க பணம் 4000ஆயிரம் கோடி சம்பளம் கொடு சம்பளம் கொடு 100 நாள் வேலைக்கான சம்பளம் கொடு பாஜக அரசே பதில் சொல் வேலைக்கான கூலியை கொடு என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் மற்றும் திமுகவினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகவீ வீரபாண்டியன் அருள் செல்வன் மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மங்கைநல்லூரில் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையிலும் நீடூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் இமய நாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Next Story