சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு

சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய்   பரிசு

திமுகவினருடன் வீரர்கள்


விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் இதுவரை 100 கோடி ரூபாய் சன்மானமாக அளித்துள்ளார் என அமைச்சர் மெய்ய நாதன் கூறினார்

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. நாக்அவுட் முறையில் பகல்இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்ற போட்டிகளில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு காவல்துறை அணியும் சென்னை கட்டங்குடி ஃபர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் தகுதிபெற்றன. அரையிறுதிப்போட்டியை துவக்கிவைத்த சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் பேசுகையில், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் தமிழ்நாடு வீரர்கள் விளையாட்டுதுறையில் பல சாதனைகளை படைத்து வருவதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததே ஆகும்.

தேசிய, சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறும் வீர்ர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஊக்கத்தொகையை வீரரது வங்கிக் கணக்கில் வரவுவைக்கும் ஒரே முதல்வர் நமது முதல்வர் ஸ்டாலினாகும். சாதனைப் படைத்த விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை 100கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. என்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன் மாவட்ட செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story