100% வாக்குப்பதிவு அவசியம்: சார் ஆட்சியர் கையெழுத்து இயக்கம்
கையெழுத்திடும் சார் ஆட்சியர்
பாராளுமன்ற தேர்தல் நேற்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை அடுத்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100% சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பிதன் அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதனை சார் கேத்திரின் சரண்யா தொடங்கி வைத்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மத்திய பேருந்து நிலையம் அருகே செல்ஃபி பூத் அமைக்கப்பட்டது.