குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கோயிலில்  1008   சங்காபிஷேகம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கோயிலில்  1008   சங்காபிஷேகம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கோயிலில்  1008   சங்காபிஷேகம்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும்,சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக ஆலயம் விளங்குகிறது.இவ்வாலயத்தில், கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, பூஜிக்கப்பட்ட காவிரி புனித நீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு, சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மஹா பூர்ணாகுதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story