மயிலாடுதுறை துலாக்கட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் 108திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை துலாக்கட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் 108திருவிளக்கு பூஜை

பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறை துலாக்கட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் தை கடைவெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகரில் காசியைப் போன்றே நகரைச் சுற்றிலும் 7 விஸ்வநாதர் கோயில்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்று காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தை கடைவெள்ளி விழா இன்று பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் கலந்துகொண்டு, மாங்கல்ய பலம் தழைக்கவும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் வேண்டி, குங்குமத்தால் திருவிளக்குக்கு மந்திரங்கள் கூறி அர்ச்சனை செய்து பிரார்த்தனை நடத்தினர்.

தொடர்ந்து, தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியை ஆன்மீக அன்பர் பாண்டுரெங்கன் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story