11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வேனா டிரைவர் கைது

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வேனா டிரைவர் கைது
X
மயிலாடுதுறையில் வேனில் பள்ளிக்கு அழைத்துவந்த 11-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் விடாமல் அழைத்த சென்று பாலியல் தொந்தரவு அளித்த வேன்  ஓட்டுனர் போக்ஸ்சோ வில் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா  சேத்தூரைசேர்ந்தரவர் மதுமோகன் (33). என்பவர் சொந்த வேன் மூலம்  25க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று  வருகிறார்.  இன்று காலை மாணவர்களை வீடுகளில் இருந்து அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்ட வேன் ஓட்டுநர் மதுமோகன் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மட்டும் கீழே இறங்க விடாமல், வேனில் வருபவர்களின் பெயர் பதிவேடு எழுத வேண்டும் என்று கூறி எழுதி தந்துவிட்டு செல்லுமாறு மாணவியை வேனில் 500 மீ. தூரம் உள்ள  அவையாம்பாள்புரம் என்ற பகுதிக்கு அழைத்து சென்று வேனில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே மாணவியை மீண்டும் பள்ளியில் இறக்கிவிட்டு மதுமோகன் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மாணவியிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் மதுமோகனை போலீசார் கைது செய்துள்ளனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டப் பகலில் மாணவியை பள்ளிக்கு சென்று விடாமல் வேன் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story