12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் ஆக்க தீர்மானம்

அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:- மயிலாடுதுறையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து 12,000 பகுதிநேர ஆசிரியர்களை திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 13 ஆண்டுகால தற்காலிக பணியை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும். ரூ.12,500 தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளத்தில் பணி அமர்த்த வேண்டும், உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story