13 பவுன் தங்க நகை கொள்ளை

13 பவுன் தங்க நகை கொள்ளை

கரூரில் பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


கரூரில் பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி வனிதா வயது 55. இவர் மார்ச் 13ஆம் தேதி காலை 9 மணி அளவில், தனது வீட்டை பூட்டிவிட்டு கரூருக்கு சொந்த வேலையாக சென்று, தனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும்,வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஆரம், நெக்லஸ், செயின், மோதிரம், தங்க காசு உள்ளிட்ட 13 பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மற்றும் கைரேகை நிபுணர்கள், வீட்டிற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது களவாடப்பட்ட நபரின் கைரேகைகள் கிடைக்கப்பெற்றதை பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை களவாடி சென்ற மர்ம நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story