அரசு மருத்துவமனைகளுக்கு 1.31 கோடி: பவர் கிரேட் நிறுவனம் வழங்கல்

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1.31 கோடி பவர் கிரேட் நிறுவனம் வழங்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு 1.31 கோடி பவர் கிரேட் நிறுவனம் வழங்கல். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூரில் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பாக, சமூக பங்களிப்பு நிதியில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூபாய் 1.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கினர்.

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 37- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,7- அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியின் மூலம் பெறுவதற்கு பவர் கிரேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிராம பகுதிகளில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அப்பகுதியில் உள்ள மக்கள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளை பெற முடியும்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பவர் கிரிட் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஊக்குவித்து பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சுதர்சண ஜேசுதாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், பவர் கிரீட் நிறுவன முதுநிலை துணை பொது மேலாளர் குணசேகரன், பொது மேலாளர் திவாகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story