பெண்ணிடமிருந்து1350 பிராந்தி பாட்டில் பறிமுதல் - ஆசாமி கைது

பெண்ணிடமிருந்து1350 பிராந்தி பாட்டில் பறிமுதல் - ஆசாமி கைது

பிராந்தி பாட்டில் பறிமுதல் 

மயிலாடுதுறை அருகே சீர்காழி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த பாண்டிச்சேரி 1350 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் பெண் கைது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தலின்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட கூடிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் 483 நபர்களில், 202 நபர்கள் மீது ஏற்கனவே 110 குவிமுச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 144 நபர்கள் மீது 110 குவிமுச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 137 நபர்கள் மீதும் 110 குவிமுச- ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று 25.03.2024 மதுவிலக்கு தொடர்பாக புதுப்பட்டினம் காவல் சரகம், கொடக்காரமூலை என்ற இடத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக 180 மிலி கொள்ளளவு கொண்ட பாண்டி பிராந்தி பாட்டில்கள் 1350 எண்ணிக்கைகள் (243 லிட்டர்) வைத்திருந்த கொடைக்கார மூலையை சேர்ந்த முருகன் மனைவி அன்புசெல்வி (38)என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி னர். கைப்பற்றப்பட்ட பாண்டி மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.100000 ஆகும்.

Tags

Next Story