1500 மாணவர்களுக்கு திரனடைவு போட்டி

மயிலாடுதுறை ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1500 மாணவர்களுக்கு மாநில அளவிலான திறன் அடைவு ஆய்வு; தருமபுரம் தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆய்வை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்:-
. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை பரிசோதனை செய்யும் விதமாக மாநில அளவில் திறன் அடைவு ஆய்வு தேர்வுகளை தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற திறன் அடைவு ஆய்வு தேர்வில் 138 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் 1500 மாணவர்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 பேர் இந்த அடைவு ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவிகள் இந்த தேர்வில் களப்பணி மேற்கொண்டனர். மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கொள்குறி வகை (ஓஎம்ஆர்) முறையில் நடைபெற்ற அடைவு ஆய்வு தேர்வினை வட்டார கல்வி அலுவலர் மேற்கொண்டார். இதில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
Next Story