கோபால்சாமி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு
1500 அடி உயர கோபால்சாமி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு.
பொள்ளாச்சி:கார்த்திகை தீபத் திருநாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அங்கலக்குறிச்சியில் 1500 அடி உயரத்தில் உள்ள கோபால்சாமி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதற்காக கோபால்சாமி, பாபா, ருக்மணி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story