17வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் கைது
கைது செய்யப்பட்ட வாலிபர்
மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோயில் மடப்புரம் ரெகுநாதபுரத்தில் வசித்து வருபவர் ராஜாராம் மகன் ராகேஷ் (23 )இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து அச்சிறுமியிடம் கேட்ட பொழுது ராகேஷ்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். அவரும் அதை ஒத்துக் கொண்டு அச்சிறுமியின் கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தார். சில மாதங்கள் கழித்து சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயது குறைவான நிலையில் 7மாத கர்ப்பமாக உள்ளதால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தினர். மயிலாடுதுறை மகளிர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அச்சிறுமியை திருமணம் செய்த ராக்கேஷ் மீது சிறுவர்கள் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சடத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.