2வீலர் மெக்கானிக்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர் பேரணி
Mayiladuthurai King 24x7 |5 Aug 2024 1:54 PM GMT
மயிலாடுதுறையில், மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் தொடங்கிய பேரணியை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் மணவாளன் தொடக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 200க்கு மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். செம்மங்குளத்தில் புறப்பட்ட பேரணி காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கல தெரு, ஸ்டேட் பேங்க் சாலை, அரசு மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை வழியாக சென்று கேணிக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
Next Story