திருப்பூர் ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள்

திருப்பூர்  ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள்

ரயில்களில் ஏற்ற கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் 

நெல் அரவைக்காக மயிலாடுதுறையிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

தமிழ்நாடு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரிசி அரவைக்காக அரசு மற்றும் தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் 2 ஆயிரம் டன்னை திருப்பூரில் உள்ள தனியார் மற்றும் அரசு அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயிலில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டது. சரக்கு பெட்டிகளில் ஏற்றப்பட்ட மூட்டைகள் திருப்பூர்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்கக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Tags

Next Story