2024 வருடத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 வழக்குகளில் 23 நபர்களுக்கு ஆயுள் தண்டனை!!

2024 வருடத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 வழக்குகளில் 23 நபர்களுக்கு ஆயுள் தண்டனை!!
X
மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டாக்டர். இராம.சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 2024 ஆம் ஆண்டில் 12 வழக்குகளில் 23 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் 12 நபர்களுக்கு பத்தாண்டு முதல் ஓராண்டு வரை சிறைதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட க அரசு வழக்கறிஞர் டாக்டர் ராமசெயோன் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முஹம்மது ஜின்னா , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படியும், வழிகாட்டுதல்படியும், மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் துறை 2024ல் சிறப்பாக செயல்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2024ல் 12 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது. அதில் 7 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிற ஐந்து வழக்குகளில் 10 ஆண்டு முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை பெறப்பட்டுள்ளது. கொலை வழக்குகளில் மட்டும் 23 குற்றவாளிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல், வீட்டை தீயிட்டு கொளுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கெதிரான குற்றங்கள் இழைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2012ல் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றிய ரவிச்சந்திரன் என்ற தலைமை காவலர் மதுவிலக்கு அமல்படுத்த செல்லும்பொழுது காரை ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 நபர்களில் 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்தை இரு நபர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆண்டு திருவெண்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கல்யாணசுந்தரம் (எ) வைரவேல் என்ற கொடூரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்யாணசுந்தரம் (எ) வைரவேலுக்கு பாலியல் பலாத்காரத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், கொலைக்காக ஒரு ஆயுள் தண்டனையும் இரட்டை ஆயுள் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. அது போல மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் சுரேஷ் மேனன் (எ) சோனி 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில் 10 ஆண்டு சிறைதண்டனை பெறப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 2025லும் 2024ம் ஆண்டை போல பெரும்பாலான வழக்குகளில் தண்டனை பெற்றுத்தர மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் துறை முடிவு செய்துள்ளது. 2025ம் ஆண்டின் முடிவில் குற்றமில்லா மயிலாடுதுறை மாவட்டம் என்ற சூழலை உருவாக்க மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் துறை முடிவு செய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகளை நல்ல முறையில் விசாரிக்க பேருதவி புரிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் ஜியாவுல் ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Next Story