2026 தேர்தலில் கிராமிய பாடல்கள் வாயிலாக தேர்தல் பிரச்சாரம்

கர்மவீரர் காமராஜர், கக்கனை முன்னிறுத்தி  கிராமங்கள்தோறும் தெருக்கூத்து, ஓரங்க நாடகம், கிராமிய பாடல்கள் வாயிலாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கலைப் பிரிவு கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தொகுதி வாரியாக கலைப்பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கலை பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர் கூறுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கிராம கமிட்டி சீராய்வு குழு அமைத்து 50 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் 2026 சட்டப் பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  அதன்படி கர்மவீரர் காமராஜர், கக்கன் போன்றவர்களை முன்னிறுத்தி கிராமங்கள் தோறும் தெருக்கூத்து ஓரங்க நாடகம் கிராமிய பாடல்கள் ஆகியவற்றின் வாயிலாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story