அரசு பள்ளிக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் கட்டிடம்

அரசு பள்ளிக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் கட்டிடம்

அடிக்கல் நாட்டு விழா 

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.25கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டினார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கல்வி பயில சிரமப்பட்டு வந்தனர். கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 2022- 23 ஆம் ஆண்டுக்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 25லட்சத்தி 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக கழிவறை வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் இன்றுநடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டுமானப்பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story