30 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய முன்னாள் மாணவர்கள்

30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் ஒன்றுகூடி சந்தித்து கொண்ட 50 வயதுடைய முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து பேராசிரியர்களின் வாழ்த்தை பெற்று குழுப்புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி:
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 1991-1994ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப்பிறகு மயிலாடுதுறையில் சந்தித்து கொண்டனர். தனியார் தங்கும் விடுதிக்கு வந்த மாணவர்கள் அவர்கள் படித்த கல்லூரிக்கு சென்று தங்களுக்கு கல்வி போதித்த பேராசிரியர்களை கொளரவித்து நினைவு பரிசுகளை வழங்கினர். கல்லூரி முதல்வர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்களின் வாழ்த்தை பெற்று குழுபுகைப்படம் எடுத்துகொண்டும் பேராசிரியர்களுடன் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து தங்கும் விடுதியில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் அன்பை பரிமாறிக்கொண்டனர். விழாவின் முத்தாய்பாக கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்சிபடுத்தி நண்பர்களின் பார்வைக்காக வைத்திருந்தது முன்னாள் மாணவர்களிடையே கடந்த கால நினைவலைகளை ஏற்படுத்தி அகமகிழ்ச்சியடைய செய்தது. வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒன்றிணைந்த இந்த மாணவர்கள் தங்களின் 50வது வயதில் ஒன்றுகூடி மகிழ்ச்சிகடலில் திளைத்ததன் மூலம் மீண்டும் குடும்பத்தினரோடு ஒன்று கூடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story