30 நிமிடம் வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலையிலிருந்து வெயில் வாட்டிவந்தது, மாலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டபோது திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை தாலுக்கா அலுவலகம் பக்கத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள கம்பிகள் பட்டாசுபோல் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, மேலும் மணல்மேடு குத்தாலம் கோமல் ஸ்ரீகண்டபுரம் மங்கைநல்லூர் கிளியனூர், செம்பனார்கோவில், திருக்கடையூர் தரங்கம்பாடி பொறையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Next Story



