மயிலாடுதுறையில் 33,650 வாக்காளர் நீக்கம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
மயிலாடுதுறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 1511 வாக்கு சாவடிகள் , ஆண் வாக்காளர்கள் 3,65,735 பெண் வாக்காளர்கள் 3,72,128 மூன்றாம் பாலினத்தவர் 20 என மாவட்டம் முழுவதும் 7,37,883 வாக்காளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக 7393 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 33,650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் தொடர்ந்து உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலங்களில் சமர்ப்பித்தோ அல்லது இணையதள மூலமும் பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் , அதற்காக சிறப்பு முகாம்கள் செயல்படும் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,17,325 பெண் வாக்காளர்கள் 1,19,650 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேர் என மொத்தம் 2,36,984 வாக்காளர்கள் உள்ளனர். சீர்காழி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,24,834 பெண் வாக்காளர்கள் 1,28,663 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 2,36,984 வாக்காளர்கள் உள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,34,669 பெண் வாக்காளர்கள் 1,38,979 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 2,73,652 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பத்து மாதங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் டபுள் என்ட்ரி, இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 33 ஆயிரத்து 650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags
Next Story